கான்பூர் வன்முறை - யோகியின் உடனடி நடவடிக்கையால் ஒடுங்கிய பெரும் கலவரம்!
கான்பூரில் வன்முறை வெடித்ததையடுத்து, உத்தரபிரதேச காவல்துறையால் குறைந்தது 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ADG), பிரசாந்த் குமார் கூறுகையில், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு முஸ்லீம் குழுக்கள் சந்தைகளை வலுக்கட்டாயமாக மூடுவதை ஒரு குழு எதிர்க்க முயன்றபோது வன்முறை வெடித்தது. தற்போது வெளியாகியுள்ள இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கலவரக்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக குமார் கூறினார். சதிகாரர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் அல்லது இடித்து தள்ளப்படும் என்றும் அவர் கூறினார் .
இதற்கிடையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், போலீஸ் DGP மற்றும் மாநில தலைமைச் செயலர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் (உள்துறை) ஆகியோருக்கு, குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரச்சனை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக, கடுமையான பிரிவுகளை விதித்துள்ளார். குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், தேவைப்பட்டால் புல்டோசரை பயன்படுத்தவும் முதல்வர் யோகி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது, இதனால் எதிர்காலத்தில் மாநிலத்தில் வகுப்புவாத வெறியை பரப்பி சூழ்நிலையை யாரும் கெடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
கான்பூர் நகரின் பெகோங்கஞ்ச் பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் மற்றும் 13 காவலர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறையில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. வன்முறையைத் தொடர்ந்து கான்பூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கான்பூர் போலீஸ் கமிஷனர் விஜய் மீனா கூறுகையில், "நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பதற்றமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மூன்று FIRகள் பதிவு செய்யப்பட்டு 36 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர்கள் கூறினார்.
Input & Image courtesy: Swarajya News