காந்தகாரில் தாலிபான்களை எதிர்த்து போராட்டம்!

ஆப்கானிஸ்தான், காந்தகாரில் உள்ள காலனியில் வசிப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-09-14 13:33 GMT

ஆப்கானிஸ்தான், காந்தகாரில் உள்ள காலனியில் வசிப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் போராட்டம் நடத்தினர்.

காந்தகாரின் மேற்கு பகுதியில் உள்ள இடத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் முன்னாள் ராணுவ தளபதிகள் மற்றும் ராணுவ படையினரின் குடும்பத்தினர் ஆவார்கள்.

இவர்கள் அனைவரும் அப்பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இதனிடையே ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அவர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.

அதாவது இன்னும் 3 நாட்களுக்குள் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காந்தகார் மக்கள், ஆளுநர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கானோர்கள் ஒன்றாக கூடி தாலிபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த தகவலை அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News