கர்நாடக காங்கிரசால் எந்த பயனும் இல்லை - கலையும் கர்நாடக ஆட்சி?

கர்நாடக காங்கிரசால் எந்த பயனும் இல்லை - கலையும் கர்நாடக ஆட்சி?

Update: 2019-05-25 11:59 GMT


கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காமல் போனதால், தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதா தளமும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்தனர். இதனால் பெருமளவில் கர்நாடக மக்கள் அதிருப்தி அடைந்தனர். 
பிறகு அந்த மாநிலத்தில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் அரசில் பல பிளவுகள் ஏற்பட்டன. இரண்டு காட்சிகளில் உள்ள தலைவர்களும் மற்ற கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தனர். முதல்வர் குமாரசாமியும் பல முறை காங்கிரஸ் கட்சி மீது பெரும் வருத்தம் தெரிவித்தார்.


அதற்கு பிறகு வந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 28 இடங்களில் 25 இடங்கள் வெற்றி பெற்றது. இதை தவிர பாஜக ஆதரித்த சுமலதா என்ற சுயாட்சி வேட்பாளர் மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்றார்.


இந்த மாண்டியா தொகுதியில் சுயாட்சி வேட்பாளருடன் மோதி தோல்வி அடைந்தது முதல்வர் குமாரசாமியின் மகன். காங்கிரஸ் ஆதரவால் தன் மகனை கூட வெற்றி பெற்று தர இயலவில்லை என்ற வருத்தத்திலும் ஏமாற்றத்திலும் குமாரசாமி உள்ளார். இதை போல் முன்னாள் பிரதமர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகௌடாவும் தும்குரு என்ற காங்கிரஸ் பலமாக இருக்கும் தொகுதியில் தோல்வி அடைந்தார். இவ்வாறு காங்கிரஸ் கட்சியினால் எந்த பயனும் இல்லை என்று பல மதசார்பற்ற தளத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணுகின்றனர். 


மதசார்பற்ற ஜனதா தளத்திலிருந்து 20 சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.வுக்கு மாறுவார்கள் என்றும், இதனால் இப்பொழுது இருக்கும்  ஆட்சிக்கு பதில் பாஜக ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலைமைதான்  ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம்  மாநிலங்களிலும் உள்ளது. 


Similar News