இளைஞர் கொடூர கொலை - காஷ்மீர் பண்டிட்கள் தொடர் போராட்டம்!
காஷ்மீரில் இளைஞர் படுகொலை சம்பவத்தை கண்டித்து தற்போது பெரும்பாலான பண்டிட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் முப்பத்தி ஆறு வயதான இளைஞர் ஒருவர் குறிப்பாக பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் படுகொலை கண்டித்து, தற்போது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவருடைய படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் இதற்காக காஷ்மீரில் பல்வேறு இடங்களில் பண்டிகைக்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுடைய போராட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
அவர்களுக்கு 2010ஆம் ஆண்டு சிறப்பு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் புகுந்த பயங்கரவாதிகள் அங்கு 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பண்டிதர்கள் தான ராகுல் பட்டு என்பவரை சுட்டுக் கொல்லப்பட்டார். அதில் படுகாயமடைந்த ராகுல் பட் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் உயிரிழந்த பண்டிட் சார்பாக அவருடைய சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு மக்களும் இந்த நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். மேலும் பல்வேறு இடங்களில் இரவு முதல் மெழுகுவத்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேரணியில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசு மற்றும் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
Input & Image courtesy: Dinamalar news