தமிழ் சங்கமம் நிகழ்ச்சியால் காசியின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது - விஸ்வநாதர் கோவில் நிர்வாகி தகவல்!

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியால் இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவு வலுப்பெற்று உள்ளதுடன் காசிம் பொருளாதார உயர்ந்துள்ளதாகவும் காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-23 06:00 GMT

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையிலும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையிலும் மத்திய அரசு சார்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி கடந்த 17ஆம் தேதி தொடங்கி வருகிற 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து ஏழு சிறப்புகள் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் காசிக்கு வரவழைத்து காசி, சாரநாத், அயோத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காண்பிக்கப்படுகின்றனர்.


அந்த வகையில் கடந்த 19ஆம் தேதி கோவையில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் ஆனது சேலம் சென்னை வழியாக நேற்று முன்தினம் வாரணாசி வந்தடைந்தது. இந்த சிறப்பு ரயிலில் தொழில் வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் காசிக்கு வந்தடைந்தனர். அவர்களுக்கு காசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் காசி விஸ்வநாதர் கோவில் , காசி விசாலாட்சி கோவில், காசி அன்னபூரணி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


அன்று மாலை சாரநாத் அழைத்துச் செல்லப்பட்டு புத்தர் முதல் ஞானோபதேசம் அடைந்த இடம் சுற்றி காண்பிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் வாரணாசி வந்து தங்கியவர்கள் நேற்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் வங்கியில் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர் . அதைத் தொடர்ந்து கால பைரவர் கோவில் மற்றும் பாரதியார் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து பனாரஸில் உள்ள நமோ படித்துறையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.


இதில் காசியைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களும் இடம்பெற்று இருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த புற்றுநோய் டாக்டர் செல்வி இராதாகிருஷ்ணா ,வாரணாசியை சேர்ந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் கமலாகர் திரிபாதிபாதி, கட்டிட நிபுணர் அணில் கிங் ஜபடேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் . கடந்த 17ஆம் தேதி முதல் வருகிற 29-ஆம் தேதி வரை மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில் இளைஞர்கள் , ஆன்மீகவாதிகள், விவசாய மற்றும் கலைத்தொழில் நிபுணர்கள் எழுத்தாளர்கள் ,தொழில் முனைவோர்கள் என ஏழு வகையான குழுவினர் ஏழு சிறப்பு ரயில்கள் மூலம் தமிழகத்திலிருந்து காசிக்கு வரவழைக்கப்பட்டு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.


இதனால் காசி மற்றும் தமிழகத்திற்கான உறவு வலுப்படுவதுடன் இருபுறமும் வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தமிழகத்தினால் காசிக்கும் காசினால் தமிழகத்திற்கும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி குறித்து காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கட்ராமன் கூறும் போது "காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் காசியின் 70 சதவீத பொருளாதார உயர்ந்துள்ளது. பனாரஸ் பட்டுகள் காஞ்சியிலும் காஞ்சிபுரம் பட்டுகள் பனாரஸிலும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு மக்கள் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், அன்னபூரணி அம்மனை தரிசிக்கு வருவது போல் காசியில் இருந்து ராமேஸ்வரம் ,மதுரை , காஞ்சிபுரம் உள்ளிட்ட கோவில்களுக்கு அதிக அளவில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே காசி தமிழ் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியால் இரு மாநில உறவு வலுப்பட்டு உள்ளது" என்றார். 


SOURCE :DAILY THANTHI

Similar News