நீதிமன்றத்தை நாடும் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள்- வாடிகன் மீது நம்பிக்கை போய்விட்டதா ?

கிறிஸ்தவர்கள் இந்திய சட்ட திட்டங்களை விட கிறிஸ்தவ சட்டமான Canon Lawவுக்கே அதிக மதிப்பளிப்பது நிதர்சனம். கிறிஸ்தவர்களிடையே நடக்கும் குற்றங்கள், சிவில் பிரச்சினைகள் குறித்து காவல் துறையில் புகாரளிக்காமல் பாதிரியார்கள் மட்டத்திலேயே தீர்த்துக் கொள்வதும் வழக்கம்.

Update: 2021-08-15 10:15 GMT

இந்தியாவில் ஆயர்களை நியமிக்கும் போது பட்டியல் இனத்தவராக இருந்து மதம் மாறியவர்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் கத்தோலிக்க சபையில் இருக்கும் சாதிய பாகுபாடுகளை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




கிறிஸ்தவ மதத்தில் 70 சதவிகிதத்திற்கும் மேல் பட்டியலகனத்தில் இருந்து மதம் மாறியவர்களே உள்ளனர். இவர்கள் கிறிஸ்தவ மதத்தில் ஒடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபைகளில் ஆயர்களை நியமனம் செய்யும்போது இந்த ஒடுக்கப்பட்ட பிரிவினரிடம் பாகுபாடுகள் பார்க்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அண்மையில் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் சேலம் மறை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேராத ஒருவரை ஆயராக நியமித்ததற்கு தலித் கிறிஸ்தவ அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக வாட்டிகனுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

ஆயர்களை நியமிக்கும்போது ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை வழங்காததற்காகவும் கத்தோலிக்க சபையில் பாகுபாடுகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த எம்.அன்பரசன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 60 சதவீதத்திற்கும் மேலான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சாதிய பாகுபாடுகளுக்கு ஆளாகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலித்துகள் மேம்பாட்டிற்காக எந்த நடவடிக்கையும் கத்தோலிக்கம் மேற்கொள்ளவில்லை என்றும் இந்தியாவில் இருக்கும் மொத்தம் 170 ஆயர்களில் வெறும் 11 பெயர் மட்டுமே ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் என்றும், தமிழ்நாட்டில் 18 ஆயர்களில் ஒருவர் மட்டுமே ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்றும் தலித்துகளுக்காக பல்வேறு அமைப்புகளை உருவாக்கி வரும் கிறிஸ்தவ அமைப்புகள் ஒரு தலித்தை ஆயராக நியமிப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள், இந்திய ஆயர் பேரவை மற்றும் தமிழ்நாடு ஆயர் பேரவைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்தனர்.

கிறிஸ்தவர்கள் இந்திய சட்ட திட்டங்களை விட கிறிஸ்தவ சட்டமான Canon Lawவுக்கே அதிக மதிப்பளிப்பது நிதர்சனம். கிறிஸ்தவர்களிடையே நடக்கும் குற்றங்கள், சிவில் பிரச்சினைகள் குறித்து காவல் துறையில் புகாரளிக்காமல் பாதிரியார்கள் மட்டத்திலேயே தீர்த்துக் கொள்வதும் வழக்கம். பல பாலியல் குற்ற நிகழ்வுகளில் கிறிஸ்தவ அதிகார அமைப்புகளின் முயற்சியில் சமரசம் ஏற்படாத பட்சத்தில் மட்டுமே காவல் மற்றும் நீதித்துறையை நாடுவர்.

இத்தாலிய கடற்படை வீரர்கள் கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற நிகழ்வில் கூட இத்தாலி மற்றும் கேரள கத்தோலிக்க சர்ச் நிர்வாகத்தினர் கலந்து பேசி மீனவர்களின் குடும்பத்தினரை இழப்பீடு வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்குமாறு மனம் மாற்றினர். இத்தகைய அதிகாரத்துக்கு கட்டுப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், வாடிகன் அரசை நிர்வாக மற்றும் அரசியல் ரீதியாக வழிநடத்தும் போப்பின் பிரதிநிதிகளாக செயல்படும் ஆயர்களை நியமிப்பதில் மட்டும் இந்திய அரசு மற்றும் நீதித்துறையை எதிர்பார்ப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.


Source :

Tags:    

Similar News