கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி கோலாகல விழா - 19ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தொடக்கம்!

கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி வருகிற 19-ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

Update: 2024-01-15 16:00 GMT

ஆறாவது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டி வருகிற 19ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த விளையாட்டில் தடகளம், கால்பந்து, கபடி கைப்பந்து வாள்வீச்சு, நீச்சல்,ஆக்கி,யோகாசனம் மல்யுத்தம் ,குத்துச்சண்டை ,துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ் உட்பட 26 வகையான பந்தயங்கள் இடம் பெறுகின்றன.


இவற்றில் 20 போட்டிகள் சென்னையில் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 500 மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதை ஒட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கியமான போட்டிகளும் இங்கு நடக்க இருப்பதால் சர்வதேச தரத்தில் ஸ்டேடியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. தொடக்க விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைப்பிதழ் கொடுத்தார்.


அவரது அழைப்பை ஏற்று பிரதமர்  மோடி தமிழகம் வருகிறார். வருகிற 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டின் கோலாகலமான தொடக்க விழா நடைபெறுகிறது .கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்பு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே 20202 ஆம் ஆண்டில் இதே ஸ்டேடியத்தில் பிரதமர் செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது


SOURCE :DAILY THANTHI

Similar News