தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் கேரள வாசிகள்... அடடா இதுதான் காரணமா? அப்போ நமக்கு இல்லையா...
கேரளாவில் தற்பொழுது லிட்டருக்கு பெட்ரோல் விலை இரண்டு அதிகரிப்பு காரணமாக செங்கோட்டை பகுதி பங்குகளில் கேரள வாகன ஓட்டிகள் நிரம்பி வழிகிறார்கள்.
கேரளாவில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தலா இரண்டு ரூபாய் உயர்த்தப்படும் என்று அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் ஒன்றாம் தேதி நேற்றிலிருந்து கேரளம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து இருக்கிறது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 109.98க்கு, டீசல் விலை லிட்டருக்கு 98.52 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் 95 ஆகவும் உள்ளது.
கேரளாவில் விட தமிழகத்தில் பெட்ரோல் 6 மற்றும் டீசல் 3 ரூபாய் குறைவாக இருக்கிறது. இதனால் தமிழக மற்றும் கேரள எல்லைகளில் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வந்து பெட்ரோல்களை நிரப்பி செல்கிறார்கள். .அதன்படி தமிழக- கேரளா எல்லை பகுதியான ஆரியன் கடவு, தென்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வாகன ஓட்டிகள் அதிகாலை முத லே தென்காசி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான புளியங்கரை, செங்கோட்டை, புதூர், கேசவபுரம், பிரான்னூர், பார்டர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வந்து பெட்ரோல் மற்றும் டீசல்களை நிரப்பி செல்கிறார்கள்.
இதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இப்படி தமிழகத்தில் அதிகமான அளவில் பெட்ரோல் மற்றும் டீசல்களை கேரள வாசிகளுக்கு கொடுப்பதன் காரணமாக இங்கு உள்ள தமிழக வாசிகளுக்கு இதன் விலை உயர்வு தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்தான கருத்தும் தற்போது வரை தெரியவில்லை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Input & Image courtesy: Maalaimalar