இந்துகோவில் சுவரில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' வசனங்கள் - பின்னணி என்ன?
ஸ்ரீ தேவி தலாப் மந்திர் அருகே சுவர்களில் வரையப்பட்ட 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' வாசகங்கள், SFJ பொறுப்பேற்றுள்ளது.
தேவி தலாப் மந்திர் அருகே சுவர்களில் காலிஸ்தான் ஜிந்தாபாத் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது என்பது தற்போது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 14 மற்றும் ஜூன் 15 இடைப்பட்ட இரவில், ஜலந்தரில் உள்ள சக்திபீத் ஸ்ரீ தேவி தாலாப் மந்திர் அருகே உள்ள சுவர்களில் சில சமூக விரோதிகள் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற கோஷங்களை எழுதினர். இச்சம்பவம் குறித்து காலை அந்தப் பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வாசகங்கள் மீது ஸ்ப்ரே பெயின்ட் பூசப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணை அதிகாரிகள், அருகில் உள்ள CCTV கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை அடையாளம் கண்டு வருகின்றனர். ஜலந்தரில் உள்ள லோடாவ்லி சாலையில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் அருகே இதே போன்ற கோஷங்கள் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வாசகங்களையும் போலீசார் ஸ்பிரே பெயின்ட் பயன்படுத்தி தற்போது வசனங்களை நீக்கி உள்ளார்கள். தகவல்களின்படி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் ஜலந்தரில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வால்வோ பேருந்துகளை கொடியசைப்பதற்காக ஜலந்தருக்குச் செல்ல உள்ளனர்.
நகரத்திற்கு VIP வருகைகளுக்கு மத்தியில், ஒரு முக்கியமான சக்திபீடத்திற்கு அருகில் உள்ள சுவர்களில் இதுபோன்ற வாசகங்களைக் கண்டறிந்தது இருப்பது, காவல்துறை உஷார் நிலையில் உள்ளது. மேலும் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழும் இருப்பதாகவும் தெரியவருகிறது. மேலும் கோவில் வசனங்களில் இத்தகைய செயலுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் கோவிலுக்கு அருகில் உள்ள சுவர்களில் வாசகங்கள் எழுதியதற்கு பொறுப்பேற்றது. SFJ இன் குர்பத்வந்த் சிங் பண்ணு வெளியிட்ட ஆடியோ செய்தியில், "அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஜலந்தர் வருகைக்கு முன், தேவி தலாப் மந்திர் அருகே இந்துக்கள் ஆதிக்கம்செலுத்தும் பகுதியில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற கோஷங்கள் எழுதப்பட்டன" என்று கூறி இருப்பது தற்போது இதை உண்மையாகியுள்ளது.
Input & Image courtesy: OpIndia news