திருவிளையாடல் பட பாணியில் கொரோனா விழிப்புணர்வு செய்யும் சிறுவன், வைரலான வீடியோ!

திருவிளையாடல் பட பாணியில் கொரோனா விழிப்புணர்வு செய்யும் சிறுவன், வைரலான வீடியோ!

Update: 2020-04-02 02:29 GMT

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனைத் தடுக்க மத்திய -மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது என பலரும் விழிப்புணர்வு செய்துவரும் நிலையில் திருவிளையாடல் பட பாணியில் சிறுவன் ஒருவன் விழிப்புணர்வு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கேள்வி கேட்க சிவாஜி கணேசன் பதிலளிக்கும் காட்சி மிக பிரபலம் அதேபோல அந்தப் பட பாணியில் அந்த சிறுவனிடம் கேள்வி கேட்கப்படுகிறது. போகக்கூடாதது? வீட்டை விட்டு வெளியே! போக வேண்டியது? உலகத்தை விட்டுப் கொரோனா! இருக்கக்கூடாது? பயம்! இருக்க வேண்டியது? தைரியம்! தவிர்க்க வேண்டியது? கூட்டமும், நெரிசலும்! தவிர்க்கக் கூடாதது? தூய்மை! பாராட்டுக்கு சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை என அந்த சிறுவன் அசராமல் பதிலளிக்கும் விதம் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

Similar News