கோவை: தனியாக ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

கோவையில் வேலை செய்யும் பெண் ஒருவர் மிட்நைட் தனியாக ரேபிடோ போட்டோக்கள் பயணம் செய்தபோது நேர்ந்த கொடூரம்.

Update: 2022-08-31 12:33 GMT

கோவையில் இளம் பெண் ஒருவர் வேலை நிமித்தம் காரணமாக இரவில் ரேபிடோ ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். எனவே அவர் பயணம் செய்த ஆட்டோ டிரைவர், அவரிடம் தவறாக நடந்து கொள்வதற்கும் முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் ஒருவர் வேலை காரணமாக கோயம்பத்தூர் செல்வபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி வேலை செய்து வருகிறார். மேலும் இவர் வெளி மாநிலங்களுக்கு போக வேண்டிய சூழ்நிலை காரணமாக இரவு கொஞ்சம் தாமதமாக தான் வீட்டிற்கு செல்ல வேண்டும்.


அதே மாதிரி நேற்று வெளியூர் சென்ற காரணத்தினால் இவரால் சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல முடியவில்லை. நள்ளிரவு வேளையில் ஹோப் கல்லூரியில் இறங்கியவர் அங்கிருந்து ரேபிடோ ஆட்டோ புக் செய்து செல்வபுரம் செல்ல முடிவு செய்துள்ளார். புக் செய்த ஆட்டோ வந்துள்ளது சிறிது தூரம் சென்ற பிறகு, டிரைவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்வதை அவர் அறிந்துள்ளார். ஆட்டோ அவிநாசி சாலை வழியாக சென்றது இரவு நேர ஆதலால் சாலை மிகவும் வெறுச்சோடி காணப்பட்டது. அங்குதான் இந்த பெண்மணி இடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் ஆட்டோ டிரைவரை பதிலுக்கு திரும்ப தாக்கி உள்ளதால், வேகமாக ஆட்டோவை எடுத்து வேறொரு பகுதிக்கு சென்றுள்ளார்.


ஆட்டோ ஒரு வளைவில் திரும்பும் பொழுது எதிர்பாராத விதமாக அந்த பெண்மணி ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பித்து உள்ளார். கீழே விழுந்ததில் இவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் விழுந்த இடத்தில் சிலர் மக்கள் கூட்டமாக நின்ற காரணத்தினால் ஆட்டோ டிரைவர் தன்னுடைய ஆட்டோவை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி இருக்கிறார். அவர்கள் இவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து பிறகு காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் தற்போது கொடுத்துள்ளார்கள். இதன் அடிப்படையில் முகமது சாதிக் என்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News