குண்டு வீசி கொலை செய்ய ஆன்லைனில் வெடிப்பொருள் வாங்கிய நபர்? - மீண்டும் ஒரு தீவிரவாத செயலா?

குண்டு வீசி கொலை செய்ய ஆன்லைனில் வெளி பொருள் வாங்கியதால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

Update: 2022-11-25 03:14 GMT

கோவையில் அதிகமான வன்முறை சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. குறிப்பாக காரில் குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாதிகள் தாக்குதல் என்று உறுதி செய்யப்பட்ட பிறகு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் கோவையில் ஆன்லைன் வெளிப்பொருள் வாங்கியதாக கைது செய்யப்பட்ட நபரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்த தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஆன்லைனில் வெளி மருந்து வாங்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.


ஏனெனில் அதே போன்று ஒரு சம்பவம் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் முன்னேற்றத்திற்காக இருக்கிறார்கள். அந்த வகையில் ஆன்லைனில் வேடி மருந்துக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் வாங்குபவரகள் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் மே மாதம் 13ம் தேதி கோவை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் ஃப்லிப்கார்ட்டில் பொட்டாசியம் 100 கிராம், 100 கிராம் போன்றவற்றை ஆர்டர் செய்து இருக்கிறார்.


அது இருபதாம் தேதி டெலிவரி ஆகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து NIA அதிகாரிகள் இந்த மாதம் 19 ஆம் தேதி செந்தில்குமாரை அலைபேசியில் விசாரித்தார்கள். இந்த விசாரணையில் தான் வாங்கவில்லை தங்கள் கடையில் பணிபுரியும் மாரியப்பன் என்பவர் தான் தன் செல்போனில் ஆன்லைன் மூலமாக வாங்கியதாக அவர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவரை விசாரணை செய்தார்கள் வெடி பொருட்களை பயன்படுத்தி கொலை செய்யும் முயற்சித்ததாக விசாரணையில் தெரியவந்து இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News