இராஜிவ்காந்தியை கொன்ற விடுதலைபுலிகளை தமிழ் தீவிரவாதிகள் என்று சொல்ல முடியுமா? கே.டி.ராகவன் சூடு!!

இராஜிவ்காந்தியை கொன்ற விடுதலைபுலிகளை தமிழ் தீவிரவாதிகள் என்று சொல்ல முடியுமா? கே.டி.ராகவன் சூடு!!

Update: 2019-05-14 11:49 GMT

காந்தியைக் கொன்ற கோட்சே இந்து தீவிரவாதி என்றும் இந்த நாட்டில் இந்துக்களின் முதல் தீவிரவாதி கோட்சேதான் என்றும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் பேசிய கமலஹாசனுக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் கமல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று நியூஸ் 7 தொலைக்காட்சி ஊடக விவாத நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பாஜக மாநில பொதுசெயலாளர் கே.டி.ராகவன் சுட..சுட பதில் அளித்தார்.


அப்போது பேசிய கே.டி.ராகவன் கமல் இந்திய வரலாற்று விவரம் எதுவும் தெரியாதவர் என்றும், அரசியல் பலன்களுக்காக அதுவும் இஸ்லாமியர்கள் மத்தியில் விஷமத்தனமாக பேசியுள்ளார் என்றும் கூறினார். கோட்சே, காந்தியை கொன்ற கொலைகாரன் மட்டுமே ..அவர் இந்து தீவிரவாதி அல்ல.


தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்பது ஒரு ரேடிசம் அடிப்படையில் ஒரு சமுதாயத்தின் மீதோ அல்லது இனத்தின் மீதோ தொடுக்கப்படும் தாக்குதல். ஆனால் ஒரு தனிமனிதன் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் ஒருவரை கொல்வதை அவர் சார்ந்த இனத்தின் அடிப்படையில் அடையாளப் படுத்தமுடியாது என்றார்.


கோட்சே இந்துவாக இருக்கலாம் ..ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் இல்லை. பாகிஸ்தான் பிரிவினையால் அதிருப்தி அடைந்த அவர் காந்தியை சுட்டுக் கொன்றார். அவர் ஒரு கொலைகாரன் அவ்வளவுதான். இந்து தீவிரவாதி என்று சொல்ல முடியாது.


ஈழம் அமைவதற்கு தடையாக இருந்தார் என்பதால் விடுதலைப் புலிகள் இராஜிவ்காந்தியை கொன்றனர். விடுதலைப் புலிகள் தமிழ் இனத்தவர்கள் என்பதால் யாராவது அவர்களை தமிழ் தீவிரவாதிகள் என்று கூறமுடியுமா? என்று அவர் கேட்ட கேள்வி தொடர்பாளரை திக்குமுக்காட வைத்தது.


மேலும் தேசிய கொடியின் வர்ணங்களின் ஒன்றான பச்சை நிறம் இஸ்லாமியர்களை குறிக்கும் என்று கூறிய கமலின் அறியாமையை சாடினார். கமலுக்கு நவகாளி கலவர வரலாறு தெரியாது என்றார். தெரிந்திருந்தால் இதுபோல பேசியிருக்க மாட்டார் என்றார். பாஜக மதவாத கட்சி அல்ல என்றும் அனைத்து மக்களாலும் ஆதரிக்கப்பட்டு மிக பிரம்மாண்டமாக வளர்ந்து வரும் கட்சி என்றார்.


நீதிமன்ற விசாரணையின் போது கூட வாக்கு மூலத்தில் கோட்சே தனக்கு பின்னால் எந்த அமைப்பும் இல்லை என்றே கூறினார். போலீசாரின் வாக்கு மூலத்தில் கூட அவன் ஒரு கொலைகாரன் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.


மேலும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் இராஜேந்திர பாலாஜி கூறியது குறித்து தொடர்பாளர் ராகவனிடம் கேட்டதற்கு முதலில் வினையாளரான கமலஹாசன் மன்னிப்பு கேட்கட்டும். பிறகு வினை எதிர்ப்பாளர்கள் குறித்து பேசலாம் எனக் கூறி கமலுக்கு பரிந்து பேசிய அனைவரையும் பதில் பேச முடியாமல் ஆக்கி வாதத்தை நிறைவு செய்தார் கே.டி.ராகவன்.


Similar News