கும்பகோணம் கோவிலில் திருடப் பட்ட சுவாமி சிலைகள் - அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

கும்பகோணத்தில் கோவிலில் திருடப்பட்ட நான்கு சுவாமி சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு.

Update: 2022-09-09 04:42 GMT

கும்பகோணத்தில் அமைந்துள்ள கோவில் தான் சௌந்தரராஜர் பெருமாள் கோவில். இந்த கோவிலில் திருடப்பட்ட சிலைகள் தான் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த கோவிலில் திருடப்பட்ட சுவாமி சிலைகள் நான்கு தற்போது அமெரிக்காவில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து உள்ளார்கள். இந்த சிலையை மீட்பதற்காக தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.


குறிப்பாக பழமையான இந்து சவுந்தரேஸ்வரர் பெருமாள் கோவிலில் திருட பார்த்த நான்கு சிலைகள் கிருஷ்ணர் சிலை, விஷ்ணு சிலை, ஸ்ரீதேவி சிலை, திருமங்கை ஆழ்வார் சிலை என்று நான்கு சிலைகள் சுமார் 13 ஆம் நூற்றாண்டு சேர்ந்த சிலைகள் ஆகும். இவை திருடப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்து அதன் பெயரில் போலீசார் தீவிர விசாரணையில் களம் இறங்கி தற்போது இந்த சிலையை கண்டுபிடித்து உள்ளார்கள்.


இந்தக் கோவிலில் திருடப்பட்ட திருமங்கையாழ்வார் சிலை லண்டன் அருங்காட்சியகத்திலும், மேலும் கிருஷ்ணர் சிலை, விஷ்ணு சிலை, ஸ்ரீதேவி சிலை ஆகிய 3 சிலைகள் அருங்காட்சியகத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எடுத்து வருகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகமும் இதற்கான தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது, குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News