சோழர்கால பழமையான இராமாயண மினியேச்சர்: கண்டுகொள்ளாத தமிழ்நாடு HR&CE!
1500 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தின் ராமாயண மினியேச்சர் புதுப்பிக்கப் படாமல் இருக்கிறது.
கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரசுவாமி கோவில் திருநாவுக்கரசரால் குடந்தை கீழ்கோட்டம் என்று குறிப்பிடப் படுகிறது. இது கும்பேஸ்வரர் கோவிலுக்கு கிழக்கே காணப்படுகிறது. 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவில் கட்டிடக்கலையின் பொக்கிஷம் என்று அழைக்கப்படுகிறது. காரணம், இந்த கோவிலில் உள்ள ஒவ்வொரு ராமாயணம் மினியேச்சர் சிலைகளும் தத்துரூபமாக கதைகளை சொல்லும் வண்ணம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட விதம் தான். எனவே அந்த வகையில் நாகேஸ்வர ஸ்வாமி ஒரு சுயம்பு மூர்த்தி, சூரியன் மற்றும் நாகராஜா ஆகியோரால் வழிபட்டதாக கூறப்படுகிறது.
ஒருபுறம், கண்கவர் புராணங்கள் மற்றும் அற்புதமான மூர்த்திகள் கொண்ட பெரிய கோவில் இருந்தது. மறுபுறம், ராமாயணம் மினியேச்சர் பேனல்கள் என அனைவருமே கவரும் வண்ணம் இந்த கோவில் அமைந்துள்ளது. பல வெளி நாட்டு மக்களும் இந்த கோவிலை தற்போது வரை ஆச்சரியமாகவும் எப்படி இப்படிப்பட்ட நுணுக்கமான மினியேச்சர் சிலைகளை அந்த காலத்திலேயே தத்ரூபமாக நடித்து உள்ளார்கள் என்பது தொடர்பாக ஆராய்ச்சிகள் தற்போது வரை மேற்கொண்டு உள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இந்த கோவிலை பராமரிப்பு பற்றி இன்னும் சிந்தித்துக் கூட இல்லை.
மேலும் இது தொடர்பாக டுவிட்டர் பதிவில், 2015 ஆம் ஆண்டு புதுப்பித்தலின் போது நேர்த்தியான ராமாயண மினியேச்சர் பேனல்கள் தற்பொழுது மணல் அள்ளியதன் மூலம் நிரந்தரமாக சேதப்படுத்திய உள்ளன. கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரன் கோவிலில் உள்ள மற்ற அழகிய கட்டடங்களையும் செய்யப்படுவதற்கு முன் நாம் இவற்றை காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.எனவே தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை இவற்றை புதுப்பித்தல் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Twitter Post