தமிழக பா.ஜ.க வில் குஷ்பு? காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி காரணமா? அதிர்ச்சியில் பா.ஜ.க வினர்.! #Kushboo #TNBJP #Congress

தமிழக பா.ஜ.க வில் குஷ்பு? காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி காரணமா? அதிர்ச்சியில் பா.ஜ.க வினர்.! #Kushboo #TNBJP #Congress

Update: 2020-07-17 07:04 GMT

தமிழக பா.ஜ.க நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் அதில் மேலும் பல பிரபலங்கள் இணைய வாய்ப்புள்ளதாக விஷயங்கள் கசிந்து வருகின்றன அவற்றில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், நடிகையுமாகிய குஷ்பு'வும் ஒருவர்.

அதனை சில பா.ஜ.க நிர்வாகிகள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர் இதனை குஷ்பு மறுக்கவில்லை என்றாலும் காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எப்போது கடுமையாக உழைக்க கூடியவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்? என்று நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அரசியலை தொடர்ந்து கவனித்து வரும் அனைவருக்கும் தெரியும், நடிகை குஷ்பு தனது கட்சியான காங்கிரசின் தலைமைக்கு தான் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார் என்று. காங்கிரஸ் என்று தனது ட்வீட்டில் எங்கும் குஷ்பு குறிப்பிடவில்லையே தவிர மற்றபடி அவர் கேள்வி எழுப்பியது காங்கிரஸ் தலைமக்கு தான் என்று விளக்கம் அளிக்கத் தேவையில்லை.

கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சியில் சீனியர்களாக இருக்க கூடிய சஞ்சய் ஜா, சச்சின் பைலட் போன்றோர் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். இதிலும் சச்சின் பைலட் துணை முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் ஜாவின் செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது. இப்படி காங்கிரஸ் தலைமை அக்கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் குஷ்பு இப்படி ஒரு பதிவை, அதாவது எப்போது கடுமையாக உழைக்க கூடியவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்? என்று வெளியிடுகிறார்.

மேலும் காங்கிரஸ் என்பது ஒரு சரியும் கோட்டை என்பது அதன் கட்சியில் இருந்து விலகும் ஆட்களின் எண்ணிக்கையை வைத்தே கூற முடியும் இது மட்டுமின்றி குறிப்பாக தமிழகத்தில் பா.ஜ.க அதன் வளர்ச்சியை நாளுக்கு நாள் உறுதிபடுத்திக்கொண்டே செல்கிறது. எல்.முருகன் தலைமையேற்றதாகட்டும், சமீப காலமாக புதிய நிர்வாகிகள் பதவியேற்பதாகட்டும், குறிப்பாக கள ரீதியான செயல்பாடுகளில் மற்ற கட்சியினருக்கு எந்தவிதத்திலும் குறையில்லாமல் செயல்படுகிறது.மேலும் ஒருபடி சென்று தனித்தனி குழுக்களாக பிரிந்து அடித்துக்கொள்ளாமல் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.இதன் அடுத்த நடவடிக்கையாக மேலும் பலர் இணையவுள்ள நிலையில் குஷ்பு'வின் இந்த காங்கிரஸ் மேலிட அதிருப்தி பா.ஜ.க'வின் நீரோட்டத்தில் குஷ்பு'வை ஐக்கியமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Similar News