உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் இந்தியாவின் அசுர வளர்ச்சி - மத்திய இணை மந்திரி L. முருகன்!
உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இந்தியாவில் வளர்ச்சி தற்பொழுது அமைந்து இருக்கிறது.
அகில பாரத் வித்யார்த்த பரிசுத் மூன்று நாள் மாநில அளவிலான மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று தற்பொழுது வையத் தலைமை கொள்ளும் என்ற ஒரு தலைப்பில் சிறந்த கருத்தரங்கம் நடைபெற்று இருக்கிறது. இதில் மதியம் இணை அமைச்சர் எம். முருகன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் மாணவராக தான் கலந்து கொண்டதை அவர் நினைவு கூறினார்.
இப்பொழுது மீண்டும் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்ததற்கு அவர் நன்றி தெரிவித்து இருக்கிறார். 1998 ஆம் ஆண்டு உண்மையில் நடைபெற்ற இது போன்ற மாநாட்டில் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்பொழுது உயர் பதவிகளில் இருந்தவர்கள் பாகுபாடு இன்றி கலந்து கொண்டனர். இந்தியா சுயசாப்பு பாரதத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் இருந்து வந்தவர்கள் தான் தற்போது இந்தியாவில் ஆட்சி செய்து வருகிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் 8 ஆண்டுகளில் இந்தியா இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.
குறிப்பாக உலக நாடுகள் இன்று இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்கி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் அசந்து போகும் இருக்கின்றது. பிரதமர் மோடி என்ன சொல்ல போகிறார் என்பதை உலக தலைவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யா உக்கரின் போரின் போது உலகத்தில் எந்த நாடுகளும் செய்யாத ஒன்றை இந்திய செய்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறை தேவையான தளவாடங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது என அவர் கூறினார்.
Input & Image courtesy: Maalaimalar