தி.மு.க, காங்கிரஸ் எம்.பிக்களை மண்ணை கவ்வ செய்த லடாக் எம்.பி - ஒரே இரவில் வலைதளங்களில் பிரபலமான பின்னணி!

தி.மு.க, காங்கிரஸ் எம்.பிக்களை மண்ணை கவ்வ செய்த லடாக் எம்.பி - ஒரே இரவில் வலைதளங்களில் பிரபலமான பின்னணி!

Update: 2019-08-08 10:57 GMT

மக்களவையில் லடாக் குறித்து உணர்ச்சி பூர்வ உரையாற்றிய எம்.பி. ஜாம்யாங் சேரிங் நாம்கியால் ஒரே இரவில் வலைதளங்களில் பிரபலமானார்.


ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் மசோதாவை, மத்திய அரசு நீக்கியது. இதுதொடர்பான மசோதாவும் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேறியது.


இந்நிலையில் இதுதொடர்பாக நடந்த விவாதத்தின் போது, ஜம்மூ-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரேதசங்களாக காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக் எம்.பி,ஜாம்யாங் சேரிங் அவையில், உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அவையில் இதுவரை அமைதியாக இருந்துவந்த ஜாம்யாங், உரையை கேட்டு வியந்த பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த உரையானது நாடு முழுவதும் ஒளிப்பரப்ப பட்ட நிலையில், ஒரே இரவில் அவர் வலைதளங்களில் பிரபலமானார்.


மேலும் அவரை டிவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் ஒரே நாளில் 30 மடங்கு, அதாவது 1,29,000 ஆக உயர்ந்தது. இது அவர் பொது தேர்தலில் வாங்கிய ஓட்டு எண்ணிக்கையை காட்டிலும் அதிகம் என கூறப்படுகிறது. இதனோடு, ஒரே நாளில் 40,000 டிவிட்களை பெற்ற முதல் லடாக்கி என்ற பெருமையும் அவர் பெற்றார்.


Similar News