லடாக்கில் சுரங்கப்பாதை கட்ட ரூ.1681.51 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அரசு முடிவு!
லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அனைத்து விதமான முயற்சிகளிலும் அரசு ஈடுபடும்.
லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். லடாக் மக்களவை உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால் ட்விட்டருக்கு பிரதமர் அளித்துள்ள பதிலில் இது பற்றி கூறுகையில், லடாக்கிற்கு அனைத்துவித கால நிலைக்கும் ஏதுவான வகையில் இணைப்பை வழங்குவதற்காக 4.1 கிலோமீட்டர் நீளம் ஷிங்குன் லா சுரங்கப்பாதை கட்டுமானத்திற்காக ரூ.1681.51 கோடிக்கு ஒப்புதல் அளித்தது குறித்து அம்மக்களின் மகிழ்ச்சியை மக்களவை உறுப்பினர் தெரியப்படுத்தியுள்ளார் என்றார்.
இது குறித்து பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, "லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அனைத்து விதமான முயற்சிகளிலும் ஈடுபடுவோம். லடாக்கில் உள்ள மக்களின் நிலைப்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளையும் செய்து கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது". குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செயல் பட்டு வருகிறது.
லடாக்கில் அனைத்து கால நிலைகளுக்கு ஏற்ற வகையில் தற்பொழுது சுருங்கபாதை அமைத்து இருப்பது பல்வேறு சிறப்பு மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இங்கு அனைத்துவித கால நிலைக்கும் ஏதுவான வகையில் இணைப்பை வழங்குவதற்காக 4.1 கிலோமீட்டர் நீளம் ஷிங்குன் லா சுரங்கப்பாதை கட்டுமானத்திற்காக ரூ.1681.51 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Input & Image courtesy: News