வருமான வரி தாக்கல் கடைசி தேதி செப்டம்பர் 30 மட்டுமே !! கால நீட்டிப்பு இல்லை...போலி செய்திகளை நம்பவேண்டாம்!!

வருமான வரி தாக்கல் கடைசி தேதி செப்டம்பர் 30 மட்டுமே !! கால நீட்டிப்பு இல்லை...போலி செய்திகளை நம்பவேண்டாம்!!

Update: 2019-09-26 06:21 GMT

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இந்த மாதம் செப்டம்பர் 30 என்று வருமான வரித்துறை அதிகாரப் பூர்வ வலைத்தளம் தெரிவித்துள்ளது, எனினும், இது அக்டோபர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக போலி அறிவிப்புகள் சமூக ஊடகங்கள் வழியாக  வெளியாகி வருகிறது,அதை நம்ப வேண்டாம் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.  


கடந்த 218 - 19ஆம் நிதியாண்டின் வருமானத்துக்கான வருமான வரி படிவத்தை அளிக்க வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் படிவம் தாக்கல் செய்யாவிட்டால், தாமத கட்டணமாக ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை செலுத்த நேரிடும். வட்டி மற்றும் அபராதம் சந்திக்க நேரிடும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 


கணினி மூலம் ஆன்லைனில் நேரடியாக தாக்கல் செய்யும்போது ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோரின் வசதிக்காக வருமான வரித் துறை கர்தாதா இ சஹயோக் அபியான் என்கிற திட்டத்தை வருமான வரி படித்தை தயாரிப்பவர்களின் உதவியுடன் தொடங்கியுள்ளது. வரி செலுத்துவோர், வருமான வரி படிவத்தை தயாரிப்பவர்களிடம் ரூ.250 செலுத்தி, இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


https://www.dinamani.com/latest-news/2019/sep/26/income-tax-returns-beware-of-fake-notice-3242469.html


Similar News