ஷவர்மா சாப்பிட்டதால் பறிபோன உயிர் - மேலும் ஒரு பெண் கவலைக்கிடம்
கேரளாவில் தனியார் பேக்கரி ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 17 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
கேரளாவில் தனியார் பேக்கரி ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 17 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு அருகே செருவத்தூர் பகுதியில் பேக்கரி கடை ஒன்று உள்ளது இங்கு ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, இதனால் பாதிக்கப்பட்ட 30 பேர் காசர்கோடு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி தேவானந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார், மேலும் ஒரு மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார். மற்ற அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநில உணவுத்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர் மற்றும் கடையில் பணியாற்றிய அனைவரும் தற்போது விசாரணை செய்து வருகின்றனர், சமீபகாலமாக ஷவர்மா எனப்படும் உணவு வகை அனைத்து உணவகங்களிலும் இடம் பிடித்து வருவதும் அதற்கான மோகம் மக்களிடத்தில் குறிப்பாக இளைஞர்களிடத்தில் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.