பெண்களுக்காக மட்டும் அரசு வழங்கும் பல்வேறு உதவித் திட்டங்கள் என்ன?

பெண்களுக்காக அரசு வழங்கும் கடனுதவி திட்டங்கள்.

Update: 2022-04-26 01:32 GMT

பெண்கள் பொருளாதாரத்தில் அக்கறை செலுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு புதிய திட்டங்களை செய்து வருகின்றனர். மேலும் அவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் தற்போது அமலில் உள்ளது. அந்த உதவித் திட்டங்களை அவ்வப்போது பெற்று சுய உதவிக் குழுக்கள் மூலம் தங்களுக்கான ஒரு சுய தொழில் தொடங்க பெண்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்ல இந்தத் திட்டங்கள் உதவுகின்றன. குறிப்பாக கிராமப் புறத்தில் இருக்கும் பெண்களுக்கும் இத்தகைய உதவித் திட்டங்கள் பல்வேறு வகையில் பலன்களை அளிக்கிறது. 


ஆனால் பலரும் இதுக் குறித்த புரிதல்கள் இல்லாமல் இந்த வாய்ப்பை இழந்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி வட்டி அதிகமாக இருக்கும், கடனில் சென்று மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் மத்திய, மாநில அரசுகள் பெண்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டு பல உதவித்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் குறைவாகத்தான் உள்ளது. 


உத்யோகினி திட்டம் இந்தத் திட்டத்தின் கீழ் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். விவசாயம் செய்யும் பெண்கள், சிறு, குறு வணிக நிறுவனங்களை நடத்தும் பெண்கள் இந்த கடனை பெற தகுதியுடையவர்கள். 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்கள் அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை உத்யோகினி திட்டத்தில் கடன் பெறலாம். அன்னபூரணா கேட்டரிங் துறை சார்ந்த பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த கடன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பாக மைசூர் மாநில வங்கிகளில் இந்த கடனுக்கான தொகைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என மொத்தம் ஆறு மாதங்களாக திரும்ப செலுத்தி விடலாம்.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News