அமெரிக்கா, ஐரோப்பாவை காட்டிலும் கொரோனா விவகாரத்தில் இந்தியா படைத்த சாதனை - உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!

அமெரிக்கா, ஐரோப்பாவை காட்டிலும் கொரோனா விவகாரத்தில் இந்தியா படைத்த சாதனை - உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!

Update: 2020-04-04 03:54 GMT

மிக நெருக்கமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஊரடங்கு மூலம் கோடிக்கணக்கான மக்களை தனிமைப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. இது ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட முடிவு என உலக சுகாதார சிறப்பு பிரதிநிதி டாக்டர் டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக பேட்டியளித்த போது பேசிய அவர், ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான நோய் தொற்று கண்டறியப்பட்டபோதே இந்தியாவில் ஊரடங்கு ஆரம்பத்தில் இருந்தது. இது உண்மையில் தொலைநோக்குடைய முடிவாக இருந்தது, ஏனெனில் இது முழு நாட்டிற்கும் வைரஸ் தாக்கம் குறித்த யதார்த்தத்தை அறிந்துகொள்ள வாய்ப்பளித்தது. நம் மத்தியில் ஒரு வைரஸ் இருப்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள். பரவுவதைத் தடுப்பதற்கும் மருத்துவமனைகளை வரிசைப்படுத்துவதற்கும் உள்ளூர் மட்டத்தில் திறன்களை வளர்ப்பதற்கு இது நேரம் கொடுத்தது.

இந்த விவகாரத்தில் நிச்சயமாக, நிறைய விவாதங்களும் விமர்சனங்களும் உள்ளன, தவிர்க்க முடியாமல் நிறைய விரக்தியுடனும் கோபத்துடனும் மக்கள் இருப்பார்கள். இருந்தாலும் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காக்க இது அவசியமான ஒன்றாகும். 

இந்த நேரத்தில் அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பீடுகள் உதவிகரமாக இருக்காது. ஆனால் வலுவான நடவடிக்கையை ஆரம்பத்தில் எடுக்கப்படாத சில நாடுகள் இருந்தன என்று நான் சொல்ல முடியும். இப்போது அவர்கள் மிகுந்த துன்பங்களுடன் போராட வேண்டியிருப்பதைக் காண்கிறோம். சுகாதார ஊழியர்களை இன்னல்களுக்கு ஆளாவதை நாங்கள் காண்கிறோம். அந்நாடுகளில் இப்பொது ஊரடங்கு  பற்றி பேசப்படுவதை நாங்கள் காண்கிறோம். உதாரணமாக, சிலர் ஆறு வாரங்கள், எட்டு வாரங்கள் பற்றி பேசுகிறார்கள். இந்தியா இதனை முன்கூட்டியே செயல்படுதிவிட்டது" என்று பேசியுள்ளார்.




 


Similar News