லூதியானா: ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு நான்கு தற்காலிக சிறை சாலைகள்!

லூதியானா: ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு நான்கு தற்காலிக சிறை சாலைகள்!

Update: 2020-04-01 12:58 GMT

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்காக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நான்கு தற்காலிக சிறை சாலையை உருவாக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது இதனால் இதுவரை 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது இதனால் 1600-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களை சிறையில் அடைக்க நான்கு தற்காலிக சிறை சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக லூதியானா போலீஸ் கமிஷினர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இச்சிறை சாலைகளில் ஒரே நேரத்தில் 6,000 பேரை அடைக்கும் வசதி உள்ளது. இதன் இடையே 200 பேரை லூதியானா போலீசார் கைது செய்து இச்சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தாங்கள் இனிமேல் ஊரடங்கு சட்டத்தை மதித்து நடப்பதாக எழுத்துப்புர்வமாக எழுதி கொடுத்ததை அடுத்து மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனார்.

Similar News