கப்பல் விபத்தை பார்வையிட சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது: 12 மணி நேரம் நீச்சலடித்து கரைசேர்ந்த மடகாஸ்கர் அமைச்சர்!

மீட்பு பணிகளை துரிதப்படுத்த காவல்துறை அமைச்சர் செர்ஜ் கெல்லே ஹெலிகாப்டரில் கடல் பகுதிக்கு சென்றார். அவருடன் உயர் அதிகாரிகள் சென்றனர். ஆனால் இந்த ஹெலிகாப்டர் இயந்திர கோளாறு காரணமாக கடலில் விழுந்தது. இதனிடையே இந்த ஹெலிகாப்டரில் சென்றவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டிருந்தது.

Update: 2021-12-23 00:45 GMT

மடகாஸ்கரில் பயணிகள் கப்பல் ஒன்று பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதனால் கடலில் தத்தளிப்பவர்களை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்ற வரும் நிலையில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 45 பேர் உயிருடன் கரைக்கு மீட்டு வந்துள்ளனர். மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீட்பு பணிகளை துரிதப்படுத்த காவல்துறை அமைச்சர் செர்ஜ் கெல்லே ஹெலிகாப்டரில் கடல் பகுதிக்கு சென்றார். அவருடன் உயர் அதிகாரிகள் சென்றனர். ஆனால் இந்த ஹெலிகாப்டர் இயந்திர கோளாறு காரணமாக கடலில் விழுந்தது. இதனிடையே இந்த ஹெலிகாப்டரில் சென்றவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில், அமைச்சர் செர்ஜ் கெல்லே மற்றும் ஒரு போலீசார் மட்டும் 12 மணி நேரத்திற்கு மேலாக கடலில் நீச்சல் அடித்து நேற்று (டிசம்பர் 21) கரை சேர்ந்துள்ளனர். அவர்கள் மிகவும் சோர்வாக இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அவர்களை மருத்துவர்கள் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே அமைச்சர் செர்ஜ் கெல்லே ஈசி சேரில் படுத்தபடியே பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Source: Maalaimalar

Image Courtesy: India Tv News

Tags:    

Similar News