ராணுவ வீரரின் இறப்பிற்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் கிராமம் - பேனர்களால் பரபரப்பு!
ராணுவ வீரர் இறப்பிற்கான மதுரை கிராமம் முழுவதும் வைத்துள்ள பேனரால் பரபரப்பு.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு இருக்கும் சம்பவம் அந்த கிராமத்தை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மட்டுமல்லாது நம்முடைய ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளார்கள் இவர்களுடைய வீர மரணம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சம்பவம் அந்த கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
மதுரையில் உசிலம்பட்டி தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்னும் ராணுவ வீரர் இந்த தாக்குதலின்போது வீரமரணம் அடைந்துள்ளார் இவருடைய வேறு மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிராமம் முழுவதும் தற்போது இரங்கல் அஞ்சலி போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது இந்த போஸ்டர் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் அதில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் தான். பதிலடி கொடுக்க கிராமமே காத்துக் கொண்டிருக்கின்றது இளைஞர்கள் சார்பில் கூறப்பட்டிருக்கும் வார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் கிராம மக்கள் சார்பாக கூறும் கருத்து என்னவென்றால் ராணுவ வீரர்கள் தாங்கள் இருக்க கிராமத்திலிருந்து உருவாக்கப் போகிறோம். இதன் காரணமாக அவர்களுக்கு திரும்ப பதிலடி கொடுப்பது நிச்சயம் என்பது போன்று அவர்கள் கூறியுள்ளார்கள். ஒருவரின் வீடு மரணம் காரணமாக அவர்களுடைய வீர மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிராமத்தில் இருக்கும் பல்வேறு இளைஞர்கள் ராணுவத்தில் சேவை இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Polimer news