தூங்கா நகர பட்ஜெட்.. ரூ.57 லட்சம் பற்றாக்குறை.. முதல்வரின் கனவின் மீது விழுந்த இடி?

மதுரை மாநகராட்சியின் பட்ஜெட் உரையில் போது 57 லட்சம் பற்றாக்குறை இருப்பதாக மேயர் பேச்சு.

Update: 2023-04-02 01:57 GMT

மதுரை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் இந்திராணி நேற்று வழங்கி இருக்கிறார். மேலும் இது குறித் து பட்ஜெட் தாக்கல் செய்த இந்திராணி பேசுகையில், கடந்த மாநகராட்சி பட்ஜெட்டில் ஒவ்வொரு வருட கவுன்சிலர்களுக்கும் வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த தொகை உயர்த்த வேண்டும் என்று ஒவ்வொரு கவுன்சிலர்களும் கேட்டுக் கொண்டார்கள். அதன் அடிப்படையில் இந்த தொகை பத்து லட்சமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சியில் இந்த நிதியாண்டில் மாநகராட்சியின் மொத்த வருவாய் 468 கோடியே 44 லட்சமும், அரசின் பல்வேறு திட்டங்களில் கிடைக்கும் மாநிலம் 1098.77 கோடியும், திட்டங்களுக்கு தற்போது வரை கடனாக 189.04 கோடியும் என மொத்தமாக தற்போது வருவாயாக 1751.25 கோடி இருக்கிறதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


மேலும் பணியாளர்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக 418.29 கோடியும், முழு செலவினங்களுக்காக ஆயிரத்து 1151.47 கோடியும், இயக்கம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக 168.43 கோடியும் மொத்த செலவினமாக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். எனவே மதுரை மாநகராட்சியின் பட்ஜெட் மக்கள் நன்றி உணர்வை மேம்படுத்தும் மற்றும் முக்கியத்துவம் அளித்ததாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மதுரை நகரை புதுயுக நகரமாக மாற்றுவதற்கு பட்ஜெட்டாக இது அமைந்து இருக்கிறது.


இருந்தாலும் இந்த பட்ஜெட் தாக்கலில் 57 லட்சம் பற்றாக்குறை இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் கனவுப்படி மதுரையை மாமதுரையாக அழகாக மாற்றுவதற்கு எல்லா வகையிலும் தன்னிறை பெற்ற மதுரையாக மாற்றி காட்டுவோம் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் அத்தகைய மாதிரியாக மாற்றுவதற்கு நிதி என்பது முக்கியமானதாக இருக்கிறது, அவற்றில் தற்பொழுது பெரிய இடி விழுந்து இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News