மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நகைகள், ஆவணங்கள் தணிக்கை சரி இல்லை - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நகைகள் மற்றும் ஆவணங்கள் சரியாக தணிக்கை செய்யப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நகையை மற்றும் ஆவணங்கள் குத்தகை நிலங்கள் தொடர்பான தணிக்கை சரியாக நடைபெறவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது தெரியவந்து இருக்கிறது. மேலும் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள விலை உயர்ந்த நகைகள் மற்றும் அசையா சொத்துக்கள் கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மூலமாக தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை தணிக்கையின் போது வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் நகை மறு மதிப்பீட்டு குழுவில் இருந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் செய்த குளறுபடி காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதனால் தற்போது நகையை மறு மதிப்பீடு தொடர்பான தணிக்கை தாக்கல் செய்யப் படவில்லை. இதனால் கோவிலில் உள்ள வில்லர் உயர்ந்த நகைகள் தொடர்பான ஆவணங்களில் முறையாக பராமரிக்க முடியாது நிலை ஏற்பட்டது. எனவே இது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தினேஷ் என்பவர் கேள்விகளை எழுப்பியிருந்தால் அதற்கான பதிலை தற்போது அரசு அளித்து இருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து அசைவு மற்றும் அசையா சொத்து இனங்கள் வாடகைதாரர் மற்றும் செல்லுக்குத் சில்லறை குத்தகைக்காரர்கள் என அனைவரிடமும் ஒப்பந்தம் தற்போது வரை எழுதி பெறாதது இந்த சமநிலையில் சட்ட விதிகளுக்கு முரணானது. குத்தகை மற்றும் வாடகை ஒப்பந்த பத்திரங்கள் உடனடியாக எழுதப்பட்டு அதை முறையாக பதிவு செய்து தணிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு பிறகு, தற்போது வரை ஒப்பந்த பத்திரம் எழுதப்படாமல் உள்ளது என்பது குறித்தான விவரங்கள் தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன.
Input & Image courtesy: News