தன் கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்கள் மீது HR&CE ஆதிக்கம் செலுத்துகிறதா?
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் நிகழ்ச்சிகளில் தலையிடுகிறது TN HR&CE?
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை நிர்வகிப்பதற்கு மற்றும் அது தொடர்பான செய்திகளை வெளியிடவும் கோவில் நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால் கட்டுப்பாட்டு இல்லாத கோவில்களில் சுதந்திரமாக செயல்படுவதற்கும், தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்வதற்கும் அந்தந்த கோவில் நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு. ஆனால் சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை அனைத்து கோவில்களும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது போல் சமூக வலைத்தளங்களில், பல்வேறு கோவில்களில் விழாக்கள் பற்றியும் மற்றும் கும்பாபிஷேகங்கள் பற்றிய தகவல்களை கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் ஆரம்பித்துள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா பற்றியும் இங்கு அறநிலையை துறை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல். இது பற்றி பல்வேறு நபர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் அந்த வகையில் டி.ஆர். ரமேஷ் என்பவர் பதிவிட்ட கருத்துக்கள், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் அரசின் கட்டுப்பாடு 13.12.1951 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு டிவிஷன் பெஞ்ச் உத்தரவின் பேரில் முடிவுக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவை உறுதி செய்தது.
இந்துக்கள் மீதான மோசடியால் இந்தக் கோவிலில் பல்வேறு செயல்களை இந்து சமய அறநிலையத் துறை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இதுபற்றி பொதுநல வழக்குகளை தொடர்ந்தாலும் சரியான பதில் கிடைப்பதில்லை என்று அவர் மேலும் கூறினார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்பதை பக்தர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
Input & Image courtesy: Twitter Source