நீட் தேர்வில் தமிழக அளவில் மதுரை மாணவன் முதலிடம்: 720க்கு 705 மதிப்பெண்கள்!

நீட் தேர்வில் தமிழக அளவில் மதுரை மாணவன் 720 க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார்.

Update: 2022-09-10 04:52 GMT

நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடத்தை மதுரையைச் சேர்ந்த மாணவர் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்கள் பெற்றார். எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு நீர் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வு மே ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.


நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மதுரையைச் சேர்ந்த மாணவன் த்ரிதேவ் விநாயகா அகில இந்திய தரவரிசையில் முப்பதாவது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இது குறித்து வெற்றி பெற்ற மாணவர் கூறுகையில் நீட் தேர்வில் வெற்றி பெற இரண்டு ஆண்டு வகுப்பறை திட்டத்தில் சேர்ந்தேன்.


கருத்துக்களை புரிந்து கொள்வதில் எடுத்த முயற்சிகள் மற்றும் கற்றல் அடிப்படைகளில் கண்டிப்பாக பின்பற்றியதன் காரணமாக நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடிந்தது ஆன்லைன் மூலமாக பல்வேறு கேள்விகளை கூறும் படித்தேன். தேர்வுக்கு தயாராகும் வகையில் நேர மேலாண்மை பயிற்சியும் பெற்று இந்த தேர்வு பற்றிய பல கருத்து அரங்குகளிலும் கலந்து கொண்டேன். கடின உழைப்பு மற்றும் ஊக்கம் காரணமாக இந்த சாதனை படைக்க முடிந்தது என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Vikatan News

Tags:    

Similar News