மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் பெண்கள் அதிகம் வட்டியை பெறுவார்கள்: பிரதமர் மோடி உறுதி!

மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தின் மூலமாக பெண்கள் அதிகம் வட்டியை பெறுவார்கள்.

Update: 2023-02-05 01:39 GMT

அசாம் மாநிலம் பார்பேட்டாவில் உள்ள கிருஷ்ணகுரு சேவாஷ்ரமத்தில் இன்று நடைபெற்ற உலக அமைதிக்கான கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனையில் காணொலி மூலம் பங்கேற்று உரையைாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், நாட்டின் வளர்ச்சிக்காக பெண்களின் பங்களிப்பு தற்போது அதிகரித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக 2023-24 மத்திய பட்ஜெட்டில் பெண்களின் சேமிப்பிற்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.


பெண்களின் வருமானத்தில் அதிகரித்து அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் தொடங்கப் பட்டுள்ளது. பெண்கள் செமிப்பின் மீதான அதிகபட்டியின் பலனை பெறுவார்கள் இதில் அசாம் , நாகலாந்து, திரிபுரா போன்ற நகரகளுக்கும் மாநிலங்களில் உள்ள பெண்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.


அதேபோல் மூங்கில் தொடர்பான சட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனை மரங்கள் பிரிவில் இருந்து அகற்றி புற்கள் பிரிவில் சேர்த்திருப்பதாக குறிப்பிட்டார். இதேபோல் அசாமை சேர்ந்த இளைஞர்கள், கலைஞர்கள் மற்றும் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்ய ஏதுவாக, பொது பட்ஜெட்டில் யூனிட்டி மால்ஸ் எனப்படும் ஒற்றுமை வணிக வளாகங்களை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இந்த வளாகங்கள் பிற மாநிலங்களின் முக்கியமான சுற்றுலாத்தலங்களிலும் அமைக்கப்படும் என்றார்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News