மேக் இன் இந்தியா முன்முயற்சியின் கீழ் இந்திய ரயில் பெட்டிகள் தயாரிப்பு: பிரதமர் பாராட்டு!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா ரயில்வே துறை சார்பில் புதிய ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொடக்கம்.

Update: 2023-01-12 08:08 GMT

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றதில் இருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு குறைந்து வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏற்றுமதி ஊக்குவிக்கும் ஒரு அரசாங்கத்தை தற்போது உருவாக்கி இருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து நாம் வாங்கப் பொருட்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான வளங்கள் அதிகமாக நாம் பெற்று இருக்கிறோம். ஆனால் அதற்காக போதிய வழிகாட்டுதல் இல்லாமல் தான் தற்போது இருக்கிறது. அந்த வழிகாட்டுதலை தான் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படுகிறது என்று பிரதமர் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.


அந்த வகையில் தற்பொழுது மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக பல்வேறு பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு நிலைக்கு நாம் உயர்ந்து இருக்கிறோம். இதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து நாம் இருவரும் இறக்குமதி செய்த ஆயிரக்கணக்கான பொருட்களை நாம் இன்று நம் நாட்டிலேயே உள்நாட்டு உற்பத்தியில் உள்நாட்டு மனித வளங்களை பயன்படுத்தி தயாரித்துக் கொண்டிருக்கிறோம். விண்வெளி துறையில் இருந்து தற்போது ரயில்வே துறை வரை பல்வேறு துறைகளில் மேக் இன் இந்தியா திட்டங்கள் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது.


மேக் இன் இந்தியா முன்முயற்சியின் கீழ் இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டிகள் தயாரிப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் அளித்துள்ள பதிலில், "130 கோடி இந்தியர்களின் வலிமையையும், திறன்களையும் மற்றும் சுயசார்பு அடையும் உறுதியையும் எடுத்துரைக்கும் தலைசிறந்த செயல்", என்று குறிப்பிட்டுள்ளார்.

Input & Image courtesy: PIB

Tags:    

Similar News