மருத்துவ வரலாற்றில் அடுத்த மைல்கல்: மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றி இதயம்!
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி இதயத்தை அறுவை சிகிச்சை மூலமாக மனிதருக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் வெற்றிகரமாக சாதித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பென்னட் 57, இவர் இதய நோயால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை காப்பாற்ற வேண்டும் என்றால் உடனடியாக மாற்று இதயம் தேவை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் டேவிட் பென்னட்டுக்கு மனிதர்களின் இதயம் பொருத்துவதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் அவரது உயிரை எப்படி காப்பாற்றுவது என்று மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டிருந்தனர்.
இதனிடையே பென்னட்டை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்துவதற்கு முயற்சி மேற்கொண்டனர். அதன்படி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையின் மூலம் இதயத்தை பொருத்தினர். இதனால் அவரது இதயத்துடிப்பு சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். விலங்குகளின் உடல் உறுப்புகளும் தற்போது மனிதர்களை காப்பாற்றுவதற்கு உதவுகிறது என்பதற்கு தற்போது அமெரிக்காவில் பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ உலகின் அடுத்த மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
Source, Image Courtesy: Daily Thanthi