மங்களூரில் குண்டு வெடிப்பு: தீவிரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல் முயற்சி!
மங்களூருவில் ஆட்டோவில் வெடி விபத்து காரணம் தீவிரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல் முயற்சி என கர்நாடக DGP தகவல்.
கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் ஆட்டோவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் விடிய, விடிய சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஏனெனில் கடந்த மாதம் கோயம்புத்தூரில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முபின் என்று தீவிரவாதி பலியாக்கினார். அது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே மாதிரி தற்பொழுது கர்நாடகாவில் தமிழகத்தில் எல்லையில் அமைந்துள்ள மாவட்டமான மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பில் ஏற்படுத்தியது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பல இடங்களில் சோதனை நடந்தது விசாரணை நடத்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஆட்டோவில் இருந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் காரணமாக அந்த பகுதி மக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்டோவில் பயணித்து ஒருவர் கைப்பையில் இருந்து வெடித்தது. இதில் பயணி காயமடைந்தார் டிரைவருக்கு எந்தவிதமான ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். நேற்று வெடிகுண்டு நடந்த இடத்தில் ரசாயன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் குண்டுவெடிப்பில் பொட்டாசியம் நைட்ரேட் கந்தகம் கலந்த தீவிரவாத செயல்களின் பின்னணி இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. அதே மாதிரி இந்த விளக்குகளும் பின்னணியில் தீவிரவாதிகள் இருப்பார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக தமிழ்நாடு- கர்நாடகா ஓசூர் அருகே சோதனை சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மங்களூருவில் ஆட்டோவில் வெடி விபத்துக்கு காரணம் தீவிரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல் தான் என்று கர்நாடக DGP தகவல்.
Input & Image courtesy: Polimer News