மேயர், நகராட்சித் தலைவரை மறைமுகமாக தேர்வு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது!

மேயர், நகராட்சித் தலைவரை மறைமுகமாக தேர்வு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது!

Update: 2020-01-09 12:47 GMT

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6 தேதி தொடங்கி நடைபெற்று வந்தது நான்கு நாட்கள் நடைபெற்று வந்த கூட்டத்தொடர் இன்று கடைசி நாள் என்பதால் பல்வேறு மசோதாக்கள் நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்டது.



இந்நிலையில் மேயர், நகராட்சித் தலைவரை நேரடியாக தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மறைமுகமாக தேர்வு செய்வதற்காக அமைச்சர் எஸ் பி வேலுமணி  தாக்கல் செய்த சட்டமுன்வடிவு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது, மேலும் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாத 10 மாவட்டங்களில் மாநகராட்சி சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு மசோதாவும் நிறைவேறியது,அதைத்தொடர்ந்து மிகவும் பழமையான மற்றும் வழக்கத்தில் இல்லாத சட்டத்தை நீக்க சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தாக்கல் செய்த மசோதா நிறைவேறியது சட்டப்பேரவையில் நிறைவேறியது.


Similar News