பல கோடி மதிப்புள்ள மீனாட்சி அம்மனின் கோவில் நிலங்கள் மீட்பு!

பல கோடி மதிப்புள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-11 11:38 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் உள்ளன அந்த இடத்திலிருந்து வரும் வருமான மூலம் கோவில் பணிகள் மேற்கொள்ள பல முயற்சிகள் நடந்து வருகிறது. அவ்வாறு ராமநாதபுரம் அரசின் திவான் ஆக இருந்த சூறாவளி சுப்பையா என்பவரின் மகனும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்தவர் சுப்பிரமணிய ஐயர். இவர் தந்தையின் பெயரால் பல்வேறு சொத்துக்களை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் சேவைகளை செய்வதற்காக எழுதி வைத்தார்.


இந்த சேவைகளை கடந்த 1847 ஆம் ஆண்டு சூறாவளி சுப்பைய்யர் டிரஸ்ட் என்று அறக்கட்டளை ஏற்படுத்தினார். இதனை நிர்வகிக்க சங்கரன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவ்வாறு மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள பல ஏக்கர் நிலங்களை இந்த டிரஸ்ட் மூலம் கோவிலுக்கு சொந்தமானவை. இவற்றை பலர் ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக கோபம் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதில் பல்வேறு பல ஏக்கர் நிலத்தின் பட்டாக்கள் இன்றளவும் கோயில் பெயரில் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


அதனை மீட்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது ஆக்கிரமிப்பு உள்ள நிலத்தை முதற்கட்டமாக மிக்க மினாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் முடிவு செய்வது. அதன்படி கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 4 சென்ட் மற்றும் 49 சென்ட் நிலத்தை தற்போது மீட்டிருக்கிறார்கள். பின்னர் அந்த கோவில் நிலத்தை சொந்தமான இடம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டு இருக்கிறது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News