வணிக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.116.50 குறைவு: எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு அறிவிப்பு!
வணிக கேஸ் சிலிண்டர் விட ரூபாய் 116.50 குறைவு என்று எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு அறிவித்து இருக்கிறது.
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோலிய பொருட்களின் விலைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு அடிக்கடி மாற்றியமைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்பொழுது சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை அல்லது மாதம் இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டது.
தொடர்ச்சியாக சமையல் கேஸ் விலை உயர்ந்து வருவதால் வணிகர்களும், வீட்டு உபயோக சிலிண்டர் உயரும் பொழுது இல்லத்தரசிகளும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை போல் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதனை இந்த நிலையில் நவம்பர் மாதத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர்கள் விலையில் நேற்று அறிவித்தது. இதில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் கட்டணம் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால் வணிக பயன்பாட்டிற்கான சமையல் கேஸ் சிலிண்டர் கட்டணம் ரூபாய் 1216.50 குறைக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. 19 கிலோ எடை கொண்ட வணிகத்திற்கான கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை கடந்த மாதம் ₹ 2009.50 ஆக விற்பனையாகி வந்தது. இதில் தற்போது ₹ 116.50 குறைக்கப்பட்டு ₹1,893 விற்பனை செய்யப்பட்டுள்ளது இது ஏழாவது முறையாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Hindutamil News