#MeToo இவர்கள் மீது காரி உமிழ வேண்டும்.. கொதித்தெழுந்த தாமரை..!

Update: 2021-05-29 06:54 GMT

சமீப காலமாக தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டு வருகிறது. அதில் பல பெரும் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில் திரைப்பட பாடலாசிரியர் தாமரை அவர்கள் "பாலியல் வன்கொடுமைகளும் பக்கம் பார்த்து பேசுதலும்"  என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு எழுதியுள்ளார்.


அந்த தொகுப்பில் அவர் "சமீபகாலமாக பெண்கள் மீதான பாலியல் புகார்கள் வந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் திரு. ராஜகோபாலன் சிக்கி அவர் சிறையில் உள்ளார், மிகவும் வேகமான நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு பாராட்டுக்கள்.  அப்படியே மூன்று ஆண்டுகள் திரும்பி பார்த்தால் சின்மயி உட்பட 13 பெண்கள் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தனர், ஆனால் சின்மயி பார்ப்பனர் என்ற ஒரே காரணத்தால் அவர் அடித்து துவைக்கப்பட்டார்,தொழில் பாதிக்கப்பட்டது. இதே போல் முகிலன் என்ற போராளி இசை என்ற பெண்ணை பாலியல் ரீதியாக ஏமாற்றி கடத்தல் நாடகம் போட்டு பின் கைதாகி வெளியில் வந்து தன்னுடைய   தொழிலை ஆரம்பித்துவிட்டார். இறுதியாக இவர்களுக்கெல்லாம் மூத்தவர் தோழர் தியாகு தன்னிடம் உதவிநாடி வந்த பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தார், இதன் விளைவாக நான் என்  கைக்குழந்தையுடன் தெருவுக்கு வந்தது தான் மிச்சம்." என்று தாமரை கூறினார்.


இன்று ராஜகோபாலனின் செயலுக்கு பொங்கும் ஊடகம்,சமூகம்,பெண்ணுரிமை போராளிகளும் அன்று வைரமுத்து, முகிலன்,தியாகு போன்ற நபர்களுக்கு என்ன செய்தனர் என்று கேள்வி எழுப்பினார். பாலியல் குற்றச்சாட்டில் ஜாதி, மதம் பாராமல் பாதிக்கப்பட்டவரிடம் நிற்க வேண்டும். ஆனால் பக்கம் பார்த்து தான் பொங்குவேன் என்றால் அது பச்சோந்தித்தனம் என்று தாமரை காட்டமாக எழுதியுள்ளார். இறுதியாக அவர் கூறுகையில், சமூகத்தில் பெரிய பெயருடன் இருப்பவர்களை சட்டப்படி தண்டனை வாங்கித்தர முடியாது. ஆனால் சமூகத்தால் முடியும், அந்த நபர்கள் வெளியில் வந்தால் அவர்கள் மீது காரி உமிழ வேண்டும். அவர்கள் வெளியில் வந்தாலே த்தூ என்ற சொல் மட்டுமே அவர்கள் காதில் கேட்க வேண்டும்.

Tags:    

Similar News