மெட்ரோ ரயில் திட்டத்திற்காக கோவில் இடிக்க திட்டமா? கிளம்பும் பக்தர்கள் எதிர்ப்பு!

மெட்ரோ ரயில் திட்டத்திற்காக கோவில் இடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-05 00:19 GMT

சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக மந்தவெளி பாதையில் உள்ள பழமையான கோவில்களை அகற்ற வேண்டிய உள்ள ஒரு சூழலை எழுந்துள்ளது. கோவிலில் இடிக்க வேண்டும் என்றால் முதலில் மாற்று இடத்தை கோவிலுக்கு வழங்கிய பிறகு தான் இது பற்றி அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் பக்தர்கள் கூறியிருக்கிறார்கள். மாற்றி இடம் தராமல் கோவிலில் இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். சென்னையின் விமான நிலையத்தில் வட சென்னை விம்கோ இருந்து இரண்டு வழி பாதைகளில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.


எனவே மெட்ரோ ரயில் திட்டத்தில் நகரின் முக்கிய நகர் பகுதிகளை இணைக்கும் நோக்கி தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், மைலாப்பூர் அடுத்துள்ள மந்தவெளியில் தற்பொழுது மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அங்குள்ள 43 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்து கோவிலை இடிக்கப்படுவதற்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் ஆதி கேசவ விநாயகர் கோயில் அமைந்திருப்பதால் அவற்றை இடிக்குமாறு நோட்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த கோவில் ஆனது 1978 ஆம் ஆண்டு சைக்கிள் ரிச்சா தொழிலாளர்களால் கட்டப்பட்டது என்றும் கூறப்பட்டது. தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இந்த கோவில் வருவதும் மற்றும் முதன்மைச் சாலையின் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்து கோவில் கட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டத்திற்காக கோவிலை முழுமையாக இடிக்கும் செயல் பக்தர்களுக்கு வேதனை தருவதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News