சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை: எப்படி இயங்கும்?

சென்னையில் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.

Update: 2022-12-24 03:11 GMT

சென்னை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் நீண்ட தொலைவிலுள்ள குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும், மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையில் விமான நிலையமும், விப்ரோ நகர் சென்ட்ரல் பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் சென்னை வாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பு வரவேற்பு கிடைத்து இருக்கிறது.


இந்நிலையில் தற்பொழுது 63,246 கோடி செலவில் 118.9 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று வழிதடங்களில் கடப்பதற்கான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடற்கரை பகுதி பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 2063 km தொலைவில், மாதவரம் சிறுஞ்சேரி சிப்காட் வரை 438 கிலோமீட்டர் தூரம் வரை புதிய வழித்தடங்கள் அமைய இருக்கிறது. இதில் உயிர்மட்ட பாதை சுரங்கப்பாதை ரயில் இயக்கம் உள்ளிட்டவை அடங்கும்.


இத்திட்டத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று பெட்டிகள் கொண்ட 26 மெட்ரோ ரயில்களை தயாரிக்க நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. 2024 ஆம் ஆண்டு இது நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்ட இருக்கிறது. நாட்டிலேயே தானியங்கி மெட்ரோ ரயில் சேவை முதல் முறையாக டெல்லியில் தான் தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தானியங்கி மெட்ரோ ரயில் சேவை சென்னையில் தொடங்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News