தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் தேர்வு - வாரிசுகளுக்கு பதவியை அள்ளி வீசுகிறதா தி.மு.க அரசு?
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் டாக்டர் அசோக் சிகாமணி தேர்வு.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 90 வது பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில தேர்தல் முன்னாள் கமிஷனர் டி. சந்திரசேகர் தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். தலைவர் இணை செயலாளர் உதவி செயலாளர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் போட்டி இருந்தது. இந்த பதிவுக்கு வைப்பு மனு தாக்கல் செய்து இருந்த எஸ்.பிரபு, ஸ்ரீ துர்கா, சிவசேனா ரெட்டி, காளி தாஸ் தனது மனுக்களை கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளில் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக டாக்டர் பி. அசோக் சிகாமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சர் பொன்மொழியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆடம் சேட் துணைத் தலைவராக ஆர்.ஐ பழனி செயலாளராகவும், சிவக்குமார் இணை செயலாளர் ஆகவும், டாக்டர் பாபா உதவி செயலாளராகவும், ஸ்ரீனிவாச ராஜ் பொருளாளராகவும் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார். உயர்மட்ட கமிட்டி உறுப்பினர்களாக 9 பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். டி.என்.பி.எல் நிர்வாக கவுன்சில் பிரதிநிதியாக ஆனந்த், பிரதீஷ், ஜாபர், ஆசிக் அலி, உறுப்பினர்களாக மாதவன், சுதா, கிரிஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். நன்னடத்தை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Nakkheeran News