ஆயுஷ் துறையின் அபரிமிதமான திறன்: உலக நாடுகள் தற்போது உணர தொடங்கியது!

ஆயுஷ் அமைச்சகத்தின் முதலாவது சிந்தனை அமர்வை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-01 01:43 GMT

ஆயுஷ் அமைச்சகத்தின் முதலாவது சிந்தனை அமர்வை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சோனாவால் தொடங்கி வைத்தார். அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவில் ஆயுஷ் அமைச்சகத்தின் முதலாவது சிந்தனை அமர்வை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆயுஷ் துறையின் அபரிமிதமான திறன் குறித்துப் பேசினார். ஆதாரம் அடிப்படையிலான அறிவியல் பூர்வ ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு இளைய ஆராய்ச்சியாளர்களையும், அறிவியலாளர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.


ஆயுஷ் மருத்துவ முறையின் ஆராய்ச்சி மற்றும் பயன்கள் குறித்து உள்ளுர் மொழிகளில் விளக்குமாறும் இதன் மூலம் பெருமளவிலான மக்களை அது சென்றடையும் என்றும் கூறினார். ஆயுஷ் துறையின் டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த முதல் அமர்வில் பங்கேற்ற ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் மகேந்திர முஞ்ச்பாரா, ஆயுஷ் துறையின் வலிமையை உலக நாடுகள் தற்போது உணர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.


ஆயுஷ் துறையின் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு துறைகளில் முறையான மாற்றங்களை கொண்டு வர முடியும். ஆயுஷ் துறையின் அபரிமிதமான திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் பல தரப்பில் உள்ள மக்களை ஆயுஷ் மருத்துவ முறையின் ஆராய்ச்சி மற்றும் பயன்கள் குறித்து அறிந்து கொள்ள உதவ முடிகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News