நாட்டின் முன்னேற்றத்தை அளிக்கும் மிகச் சிறந்த திட்டம்: மத்திய அரசின் முயற்சி!

குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடியது.

Update: 2023-01-24 13:59 GMT

இந்த ஆண்டு தேசிய பெண் குழந்தை தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்த தீர்மானித்தது. பெண் குழந்தைகளின் மதிப்பு தொடர்பான நிகழ்ச்சிகளை ஜனவரி 18 முதல் 24 வரை ஏற்பாடு செய்யுமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. இந்தப் பிரச்சாரத்தை சமூக ஊடக தளங்களில் பதிவேற்ற தகவல் ஹேஷ்டாக் ஒன்றை உருவாக்கியுள்ளது.


பெண் குழந்தைகளின் மகிமை மற்றும் குழந்தைகள் உரிமை குறித்த நேர்மறையான செய்திகளை பரப்பும் வகையில் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 5 நாட்களில் இயக்கங்கள், வீடு வீடாகச் சென்று பிரச்சாரங்கள், பள்ளிக் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், சுவரொட்டிகள், முழக்கங்களை எழுதுதல், ஓவியம் வரைதல், சுவரோவியங்கள் வரைதல் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குதல், அவர்களின் ஆரோக்கியம் உள்ளிட்ட விவாதங்கள், மரம் நடும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன. கல்வி, விளையாட்டு, சமூக நலன் ஆகிய துறைகளில் உள்ளூர் சாம்பியன்களைப் பாராட்டும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


மத்திய அரசின் முக்கியத் திட்டமான, “பெண் குழந்தையைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற முன்முயற்சி 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பாலின பாகுபாட்டை அகற்றி, பெண் குழந்தைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு உரிய கல்வியை வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்தத் திட்டம் பல்வேறு அளவுகோல்களில் முன்னேற்றம் கண்டு நாட்டின் மிகச் சிறந்த திட்டமாக மாறியுள்ளது.

Input & Image courtesy: PIB

Tags:    

Similar News