9 நாட்களுக்கு பிறகு மாயமான விமானப்படை விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு.. 13 பேரின் கதி என்ன?

9 நாட்களுக்கு பிறகு மாயமான விமானப்படை விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு.. 13 பேரின் கதி என்ன?

Update: 2019-06-11 10:42 GMT

அசாம் மாநிலம் ஜோர்காட் விமான படை தளத்தில் இருந்து ஜுன் 3ம் தேதி 13 பேருடன் ஏ.என்.32 ரக சரக்கு விமானம் அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றது.


அப்போது சிறிது நேரத்தில் விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணியில் விமானபடை வீரர்கள் ஈடுபட்டனர்.


இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் லிபோ பகுதியின் வடக்கே உடைந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த எம்.17 ரக ஹெலிகாப்டரில் சென்றிருந்த விமானப்படை வீரர்கள் உடைந்த பாகங்களை கண்டுபிடித்துள்ளனர்.


இந்த பாகங்கள் ஏ.என்.32 ரகத்தின் பாகங்கள்தானா என்பன குறித்து ஆராய்ந்து வருகின்றனர். விமானத்தில் பயணித்த 13 பேர் என்ன ஆனார்கள் என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.


Similar News