ஜூலை 30 சனிக்கிழமை அன்று, உத்தரபிரதேசத்தில் உள்ள அசாம்கர், கிராமவாசிகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்ற ஆறு பெண்களைக் கைது செய்தனர். பிறந்தநாள் விழா என்ற போர்வையில் இந்த மோசடி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் முக்கிய குற்றவாளியான இந்திரகலா என்பவர், தனது கணவருடன் மஹாராஜ்கஞ்ச் போலீஸ் நிலையத்தின் வஞ்சித் பஸ்தி விஷ்ணு நகர் வார்டில், வாடகை வீட்டில் தனது கணவருடன் வசித்து வந்தார். தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடும் சாக்கில் பக்கத்து கிராமங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட கிராம மக்களைக் கூட்டிச் சென்றுள்ளனர். அந்நிகழ்ச்சியின் போது இந்திரகலாவின் உதவியாளர்கள் கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்க தொடங்கினர். ஆனால் அதற்கு முன் அவர்கள் கிராம மக்களிடம் பிரசுரங்களை கொடுத்து இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன்பு, அதை படித்து கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர்.
குற்றம் சாட்டப்பட்ட சுவிசேஷகர்களும் கிராம மக்களுக்கு பணம் கொடுத்து அவர்களை கவர்ந்திழுக்க முயன்றனர். கிறிஸ்தவ மதத்திற்கு திரும்புவது பேய்கள் மற்றும் ஆவிகளின் தொல்லையில் இருந்து விடுபட உதவும் என்று அவர்கள் உறுதியளித்தனர். நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில கிராம மக்கள் பஜ்ரங்தள் உறுப்பினர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர்.
அவர்கள் உள்ளூர் காவல்துறையினருக்கு இது குறித்து தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அசாம்கர் போலீசார் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தினர். காவல் துறையினரை பார்த்து பலர் தப்பி ஓடிய நிலையில் முக்கிய குற்றவாளியான இந்திரகலா மற்றும் அவரது ஐந்து கூட்டாளிகளான சுபகி தேவி, சாதனா, சம்தா, அனிதா மற்றும் சுனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த இடத்தில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ மதப் புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை கைப்பற்றினர்.
இந்த மதமாற்ற முயற்சி குறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் சித்தார்த்த்குமார், "மஹாராஜ்கஞ்ச் காவல்நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் கமலேஷ் யாதவ், சில பெண்கள், ஏழ்மையான நிலையில் உள்ள கிராம மக்களை மதம் மாற்ற தூண்டுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து காவலர்களுடன் அங்கு சென்றார். மதம் மாற வற்புறுத்தியவர்கள் கோபம் கொண்டாலோ அல்லது மதம் மாற எதிர்ப்பு தெரிவித்தாலோ மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மக்களை அச்சுறுத்தியது தெரிய வந்தது தகவல் கிடைத்ததும் மஹாராஜ்கஞ்ச் நகர் பஞ்சாயத்தின் வார்டு எண்-1ல் உள்ள தலித் குடியிருப்பு பகுதிக்கு சென்ற காவல் துறையினர் அங்கு பிறந்தநாள் விழா என்ற போர்வையில் மக்களை மதம் மாற்றுகின்றனர் என தெரிந்துகொண்டு சம்பவ இடத்திலேயே ஆறு பெண்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர் என்று எஸ்பி சித்தார்த் குமார் கூறினார்.