மோபா சர்வதேச விமான நிலையம்: நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி!
மோபா சர்வதேச விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
கோவாவில் தற்பொழுது மோபா விமான நிலையம் ஒரு வருடத்தில் சுமார் 85 லட்சம் பணியாளர்களை கையாளும் திறன் கொண்டது. இலையில் வடக்கு கோவாவின் மோபாவில் உலகம் தரம் வாய்ந்த வசதிகளுடன் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து தொடங்கி வைத்து இருக்கிறார்.
சுமார் ₹ 2870 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமான நிறுத்தும் வசதி மற்றும் சரக்கு முனையும் ஆகியவற்றை புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய முதல் கட்டமாக 85 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது. பல்வேறு வகையான நவீன தொழில் நுட்பத்தில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையம் முதல் திட்டமும் நிறைவடைந்த பிறகு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி பயணிகளை கையாளும் என்று கூறப்படுகிறது. ஏற்றுமதிக்கு அதிக அளவில் உதவி செய்யும் இந்த விமான நிலையம் சர்வதேச போக்குவரத்தில் ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் என்பதும் பெருமை கொள்ளத்தக்கது. இந்த விமான நிலையத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டுக்கு அர்ப்பணித்து இருக்கிறார். இதன் மூலம் இந்தியாவின் தரம் சர்வதேச அளவில் மேலும் உயரும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Maalaimalar