ரமலான் பண்டிகைக்காக நம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் மாலத்தீவு அதிபருக்கும் மக்களுக்கும் வாழ்த்து சொன்ன மோடி!
ரமலான் பண்டிகையை ஒட்டி நம் நாட்டு மக்களுக்கும் மாலத்தீவு அதிபர் மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரமலான் பண்டிகையை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் அனைவருக்கும் ரமலான் திருநாள் வாழ்த்துக்கள். இரக்கம், ஒற்றுமை, மற்றும் அமைதி ஆகியவற்றின் உணர்வை இந்த பண்டிகை பரப்பட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் இந்த பண்டிகை கொண்டு வரட்டும் என குறிப்பிட்டார்.
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரமலான் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் 'பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகை நாம் கனவு காணும் அமைதியான உலகத்தை கட்டமைக்க இரக்கம் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகியவை அவசியம் என்பதை உலக மக்களுக்கு நினைவுபடுத்துகிறது.
ரமலான் திருநாளை ஒட்டி மாலத்தீவு அதிபர், அந்நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளது .மாலத்தீவில் மருத்துவ சேவையில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர்களை இயக்கி பராமரித்து வந்த இந்திய ராணுவத்தின் முதல் குழு அந்நாட்டு அரசு கோரிக்கையை ஏற்று அண்மையில் தாயகம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
SOURCE :Dinamani