இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் வறுமையை முற்றிலும் மோடி அரசு ஒழிக்கும்- ராஜ்நாத்சிங்!

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் நாங்கள் வறுமையை முற்றிலும் ஒழிப்போம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார் .

Update: 2024-04-29 17:29 GMT

ராஜ்நாத்சிங்  நிருபர்களுக்கு அளித்த பேட்டி :-

சூரத்தில் இருந்து எங்களது வெற்றி கணக்கை துவங்கினோம். 28 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. தோல்வியைக் கண்டு காங்கிரஸ் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. அவர்கள் எமர்ஜென்சியை கொண்டு வந்தனர் .அடிப்படை உரிமைகளை ரத்து செய்தனர் .

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்கட்சியாளர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களது நீதிமன்றத்தில் சவால் செய்யலாம். 2014 வரை பொருளாதாரத்தில் 11-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2027க்குள் இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக வருவதை யாராலும் தடுக்க முடியாது .பிரதமர் மோடி நம்பகமான தலைவராக இருக்கிறார். அவருக்கு தொலைநோக்கு பார்வை உள்ளது. இந்தியா கூட்டணிக்கு ஒரு தலைவர், கொள்கை ஏதும் கிடையாது. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் நாங்கள் வறுமையை முற்றிலுமாக ஒழிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :Dinamani

Similar News