கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது மோடி அரசு.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது மோடி அரசு.!

Update: 2020-04-10 03:04 GMT

கொரோனா தடுப்புக்கு மாநிலங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது மோடி அரசு.

கொரோனா தொற்று பரவலை தடுக்க தேசிய மற்றும் மாநில அளவில் உள்ள சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தி தேவையான மருத்துவ சாதனங்கள் வாங்கவும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு மேம்படுத்தவும் பரிசோதனை கூடங்களை மேம்படுத்தி நவீனபடுத்தவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது

மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு மூன்று கட்டங்களாக ரூ.15, ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க உள்ளது இதன் மூலம் மாநில அரசு தரமான மருத்துவ உபகரனங்கள் வாங்கவும் நோய் தடுப்பு கிருமி நாசினிகள் வாங்கவும் உயிர் காக்கும் கருவிகள் அபாயகட்டத்தில் உள்ள நோயாளிகளின் சுவாசத்தை மேம்படுத்தவும் கருவிகள் வாங்கலாம்

கொரோனா சிறப்பு தனி பிரிவுகள் அமைக்கவும் கூடுதல் படுக்கை வசதிகள் கொண்ட தனி மருத்துவ மனைகள் அமைக்கவும் இந்த நிதியை மாநில அரசுகள் பயன்படுத்தி கொள்ளலாம்

மருத்துவர்கள் நியமனம் செவிலியர்கள் நியமனம் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை கூடங்கள் உருவாக்கவும் கவச உடைகள் முககவசம் வாங்கவும் மாநில அரசுகள் யூனியன் பிரதேச அரசுகள் பயன்படுத்திகொள்ளலாம் என மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது


Similar News