"நாட்டில் முதன் முறையாக இதர பிற்பட்டோர் நலனுக்காக ஆணையம் அமைத்தவர் பிரதமர் மோடிதான்" - அமித்ஷா புகழாரம்!

"நாட்டில் முதன் முறையாக இதர பிற்பட்டோர் நலனுக்காக ஆணையம் அமைத்தவர் பிரதமர் மோடிதான்" - அமித்ஷா புகழாரம்!

Update: 2019-10-10 03:15 GMT

மகராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில் "இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கடந்த 70 ஆண்டுகளில் முன்பிருந்தவர்கள் பிற்பட்டோர் நலனுக்காக தனி ஆணையம் அமைத்ததில்லை. இது குறித்து அவர்கள் சிந்தித்ததுமில்லை.


முதன்முறையாக இதர பிற்பட்டோருக்கான தனி ஆணையம் அமைத்த பெருமை பிரதமர் மோடியை மட்டுமே சேரும் என்றார். கடந்த 70 ஆண்டுகளில் முந்தைய அரசாங்கங்களால் செய்ய முடியாத இந்த ஒபிசி கமிஷனை அமைத்ததன் மூலம் பின்தங்கிய வர்க்கங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மோடி வழி வகை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.


370 வது பிரிவை ரத்து செய்வதன் மூலம் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைத்த பெருமையும் பிரதமர் மோடியையே சேரும் என்ற அவர் மோடியை வெகுவாக பாராட்டினார்.


370 வது பிரிவை ரத்து செய்வதன் மூலம் "பிரதமர் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார். அவரது பணி இந்த (மராத்வாடா) பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் அடைய வேண்டும். "பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு பல வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது" என்றார் அவர்.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமித்ஷா வருகையில் அவரை சிறப்பான முறையில் வரவேற்பதற்காக அரசியல் அமைப்பு சட்டம் 370 பிரிவை நீக்கியதை குறிப்பிடும் வகையில் 370 கொடிகளை பறக்கவிட்டனர்.


Similar News